பாடல் 789 - பாகை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தான தானன தானம், தான தானன தானம் தான தானன தானம் ...... தனதான |
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந் தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென் றாயு வேதனை யேயென் ...... றுலையாதே சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந் த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந் தேவ நாயக நானின் ...... றடைவேனோ பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும் பாவை பாகனு நாளும் ...... தவறாதே பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென் பாகை மாநக ராளுங் ...... குமரேசா கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங் கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங் கோல மாமயி லேறும் ...... பெருமாளே. |
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 789 - பாகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தேடி, தானம், நான்கு, வேதங்களும், அழகிய, கூன், யார், அன்று, சிறந்த, நான்மறை, பாகை, கோடி, பெருமாளே, பெரிய