பாடல் 790 - பாகை - திருப்புகழ்

ராகம் - ஹிந்தோளம்
தாளம் - ஆதி - 2 களை
தாளம் - ஆதி - 2 களை
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான |
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே. |
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள 'பாகசாலை' என்னும் தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 790 - பாகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தன, மீன்கள், உள்ள, பெருமாளே, நான், விரும்பிய, சாடி, நோய்கள், மூளை, நரம்புகள், வாளை, பாகை