பாடல் 786 - திருக்கடவூர் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த தானதன தான தத்த ...... தனதான |
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி தூயவொளி காண முத்தி ...... விதமாகச் சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின் மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய் ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள் கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே. |
சூலம் போல மூன்று கிளைகளாக* ஓடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கி, பரிசுத்தமான பர ஒளியைக் காணவும், முத்தி நிலை கை கூடவும், சூழ்ந்துள்ள ஆணவ இருளாகிய உருவத்தை அழிபடும்படியாக யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள நிர்மலமான வீட்டை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியிலே, ஆயிரத்தெட்டு இதழோடு கூடிய மேலான குரு கமலத்தில் (ஸஹஸ்ராரத்தில்)** சேர்ந்து, சிவ ஞான இன்ப ஒளியைப் பிரதிபலிக்கும் புனலில் மூழ்கி, வேல், மயில் இவைகளின் தரிசன ஒளியை அந்த நிலையில் கிடைக்கப் பெற்று, முக்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளைத் தந்தருளுக. ஓலமிட்டு அழும் அசுரர்களும், எட்டுத் திசைகளில் உள்ள கடல்களும், சக்ரவாளகிரியும் அழிபடவும், கிரெளஞ்ச மலையும் தொளை படும்படியாகவும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, சிறப்பான குற மானாகிய வள்ளியின் தினைப்புனக் காட்டுக்குச் சென்று, அவளுடைய காலை வருடி, அவளுடைய மனத்துள் பதியும்படி ஓம் என்னும் பிரணவ உபதேசமாகிய மூலப் பொருளோடு அவளை அணைந்தவனே, யமனுடன் (அவன் வாகனம்) எருமையும் அழிய, விதிப்படியே பூமியின் மேல் விழும்படி உதைத்துக் கிடத்தின காலகாலனாகிய சிவபிரானின்*** இடப் பாகத்தில் உள்ள பராசக்தி பார்வதி அருளிய பாலனே, ஊழிக் காலம் முதலாக வாழ்ந்து வரும் இந்தப் பூமிக்கு ஆதார நகராயுள்ள திருக்கடவூரில் இருக்கும் கோபுரத்தில் காட்டு மயில் போன்ற வாகனத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
*** தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக சிவபிரான் யமனை உதைத்துத் தள்ளி, கால ஸம்ஹார மூர்த்தியாக இருக்கும் தலம்.திருக்கடவூர் மயிலாடுதுறைக்குத் தென்கிழக்கே 13 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 786 - திருக்கடவூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், உள்ள, இடைகலை, தானதன, மயில், பிங்கலை, பத்து, இருக்கும், தத்த, ஒன்று, நாடிகளுள், விடும், உள்ளது, பெயர்களும், உரிய, யும், முனை, சுழு, சுவாசம், உடலில், மூன்று, அந்த, பெருமாளே, ரித்து, முத்தி, சென்று, அவளுடைய, பெயர், ஸஹஸ்ராரம், காற்றுக்கு, என்றும், மேல், சக்கரம்