பாடல் 777 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதனன தத்ததன தனதனன தத்ததன தனதனன தத்ததன ...... தனதான |
விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு விரைதருவி தட்கமல ...... கணையாலே அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல் அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில் அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற அவசமொட ணைத்தருள ...... வரவேணும் அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு அனையமயில் முத்தமணி ...... சுரயானை அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி கருணையொட ளித்ததிற ...... முருகோனே கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி கழுமலந கர்க்குமர ...... பெருமாளே. |
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவி பாடுவது போல் பாடியது.சந்திரன், மன்மதன், மலர் அம்பு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 777 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தனதனன, என்னும், தத்ததன, அழகிய, சீகாழி, சண்பை, கொள்ளும், மற்ற, முனிவர், மிக்க, மிகுந்த, பொருந்திய, பெருமாளே, அச்சமயத்தில், மன்மதன், தாமரை, உடைய, என்னை