பாடல் 767 - சீகாழி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன ...... தனதான |
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை மெய்யா ரப்பணி பூஷண மாலைக ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு கையா ரக்கணை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் செய்வா ரிப்படி யேபல வாணிப மிய்யா ரிற்பண மேயொரு காசிடை செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் செய்வா ரிற்படு நானொரு பாதகன் மெய்யா எப்படி யோர்கரை சேர்வது செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே மையா ரக்கிரி யேபொடி யாய்விட பொய்சூ ரப்பதி யேகெட வானவர் வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா வையா ளிப்பரி வாகன மாகொளு துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய் மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ் செய்யா முத்தமி ழாகர னேபுகழ் தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் திய்யா ரக்கழு வேறிட நீறிடு கையா அற்புத னேபிர மாபுர செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. |
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 767 - சீகாழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், பூஜித்த, தானன, என்னும், தத்தன, தய்யா, பொருந்திய, உடையவனே, கொண்ட, தேவர்கள், சண்பை, முனிவர், மற்ற, சீகாழி, பெயர், செய்பவர்கள், செய்வா, கையா, ரிப்படி, மெய்யா, எப்படி, சேர்வது, நல்ல, உடலில், பெருமாளே, செய்யா, நான்