பாடல் 757 - கடம்பூர் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானனம் தானான தானனம் தானான தானனம் தானான ...... தனதான |
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண மால்கடந் தேபோமெ ...... னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார வாசகம் போல்கூறி ...... யணைமீதே சேருமுன் காசாடை வாவியும் போதாமை தீமைகொண் டேபோமெ ...... னடமாதர் சேரிடம் போகாம லாசுவந் தேறாமல் சீதளம் பாதார ...... மருள்வாயே நாரணன் சீராம கேசவன் கூராழி நாயகன் பூவாயன் ...... மருகோனே நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட சூரியன் தேரோட ...... அயிலேவீ தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே. |
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 757 - கடம்பூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனம், தானான, வாருங்கள், அருகில், காவேரி, கேசவன், பெருமாளே