பாடல் 752 - விருத்தாசலம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த ...... தனதான |
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர் அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய் அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர் வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே. |
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 752 - விருத்தாசலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதத்த, அடைந்து, வெளியே, பெருமாளே