பாடல் 751 - விருத்தாசலம் - திருப்புகழ்

ராகம் -
ஹரிகாம்போதி
தாளம் - ஆதி - 2 களை
தாளம் - ஆதி - 2 களை
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி செயமுன மருளிய ...... குளவோனே திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு தெறிபட மறுகிட ...... விடுவோனே ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள் கணினெதிர் தருவென ...... முனமானாய் கருமுகில் பொருநிற அரிதிரு மருமக கருணையில் மொழிதரு ...... முதல்வோனே முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட முரணுறு மசுரனை ...... முனிவோனே முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு ...... பெருமாளே. |
* முருகனே திருஞானசம்பந்தராக வந்து சமணரைக் கழுவேற்றினார் என்பது சுவாமிகளின் கருத்து.
** அருணகிரிநாதர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இங்கு குறிப்பிடப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 751 - விருத்தாசலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, உடைய, இங்கு, வந்து, பெருமாளே, முதல்வோனே, முதுகிரி, முன்பு