பாடல் 750 - விருத்தாசலம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன தனத்தானன தானன தானன ...... தனதான |
குடத்தாமரை யாமென வேயிரு தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் குலக்கார்மயி லாமென வேகயல் விழித்தார்கர மேல்கொடு மாமுலை குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை படித்தார்மயி லாமென வேநடை நெளித்தார்பல காமுகர் வார்கலை பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் படிக்கார்மின லாமென வேநகை புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள் பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ அடைத்தார்கட லோர்வலி ராவண குலத்தோடரி யோர்சர னார்சின மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே அறுத்தாரய னார்தலை யேபுர மெரித்தாரதி லேபுல னாருயி ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா விடத்தாரசு ரார்பதி வேரற அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம் விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர விழித்தாமரை போலழ காகுற மகட்கானவ ணாஎன தாயுறை விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே. |
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 750 - விருத்தாசலம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, என்றும், தனத்தானன, லாமென, வாய்ந்த, மயில், கொண்ட, மூன்று, அழகனே, ஆகிய, சொல்லும்படியான, அறுத்துத், உடையவர்கள், மேல்கொடு, யாமென, வாயிதழ், பெருமாளே, போல், தாமரை, கொண்டவர்களாய்