பாடல் 749 - திருநெல்வாயில் - திருப்புகழ்

ராகம் -
நாட்டை
தாளம் - அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தக-1, திமி-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தக-1, திமி-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த தனன தானன தானனாத் தனந்த ...... தனதான |
அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டு பகரு நாவினர் லோபர்தீக் குணங்க ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர் அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே நறிய வார்குழல் வானநாட் டரம்பை மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து மதியு லாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே. |
* ஏழிசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும் ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.
** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள சிவபுரி என்ற தலம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 749 - திருநெல்வாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, தனந்த, தங்கள், தானனாத், தானன, பெண்கள், பெருமாளே, மீது, சென்று, ஆகும், வயல்கள், நீண்ட, கிடந்து, கிரங்கி, பிறந்து, கவர்ந்து, நினைவு, தடிந்த, வறுமை, பிரிந்து