பாடல் 73 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ......
தனத்தந் தானன தத்தன தத்தன தனத்தந் தானன தத்தன தத்தன தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான |
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள் கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல ...... தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம் ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனை நினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி ...... யெனவோதி உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை யுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி ...... லுழலாமே உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ் கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம் உளத்தின் பார்வையி டத்தினி னைந்திட ...... அருள்வாயே கறுக்குந் தூயமி டற்றன ருஞ்சிலை யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் ...... மருகோனே கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி திருச்செங் கோடுஇ டைக்கழி தண்டலை களர்ச்செங் காடுகு றுக்கைபு றம்பயம் ...... அமர்வோனே சிறுக்கண் கூர்மத அத்திச யிந்தவ நடக்குந் தேரனி கப்படை கொண்டமர் செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... யுருவானோன் செருக்குஞ் சூரக லத்தையி டந்துயிர் குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள் திருச்செந் தூர்நக ரிக்குள்வி ளங்கிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 73 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, உடைய, என்னும், தனத்தந், தானன, ஆகிய, மிகுந்த, பெருமாளே, முண்டைகள், கூரிய, நான்