பாடல் 721 - சேயூர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தனனாதன தானன தானன தனனாதன தானன தானன தனனாதன தானன தானன ...... தனதான |
முகிலாமெனும் வார்குழ லார்சிலை புருவார்கயல் வேல்விழி யார்சசி முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் முலைமாலிணை கோபுர மாமென வடமாடிட வேகொடி நூலிடை முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் அகிசேரல்கு லார்தொடை வாழையின் அழகார்கழ லார்தர வேய்தரு அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி அனமாமென யாரையு மால்கொள விழியால்சுழ லாவிடு பாவையர் அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ ககனார்பதி யோர்முறை கோவென இருள்காரசு ரார்படை தூள்பட கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா கமலாலய நாயகி வானவர் தொழுமீசுர னாரிட மேவிய கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா மகிழ்மாலதி நாவல்ப லாகமு குடனாடநி லாமயில் கோகில மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா மதிமாமுக வாவடி யேனிரு வினைதூள்பட வேயயி லேவிய வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே. |
* சேயூர் இப்போது செய்யூர் என்று வழங்கப்படும். இதற்கு வளவாபுரி என்ற பெயரும் உண்டு. மதுராந்தகத்துக்கு கிழக்கே 16 மைலில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 721 - சேயூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர்கள், தானன, தனனாதன, நாயகி, மரம், மயில், உள்ள, வள்ளி, போலவும், பெருமை, வளவாபுரி, பெருமாளே, சந்திரனைப், பொருந்திய, விளங்க