பாடல் 720 - மதுராந்தகம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான |
மனைமாண்சுத ரான சுணங்கரு மனம்வேந்திணை யான தனங்களு மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி மயமாம்பல வான கணங்குல மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார இனவாம்பரி தான்ய தனம்பதி விடஏன்றெனை மோன தடம்பர மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா இடவார்ந்தன சானு நயம்பெறு கடகாங்கர சோண வியம்பர இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார் தமதாஞ்சுத தாப ரசங்கம மெனவோம்புறு தாவ னவம்படர் தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே முனவாம்பத மூடி கவந்தன முயல்வான்பிடி மாடி மையைங்கரர் முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு முககாம்பிர மோட மர்சம்பன மதுராந்தக மாந கரந்திகழ் முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே. |
* முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.
** தாம்பிர சூடம் - இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.
*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 720 - மதுராந்தகம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதாந்தன, தனந்தன, பொருந்திய, மேலான, பெருமை, சிவந்த, முருக, நிறைந்த, செய்கின்ற, பொருள், தேவர்கள், செல்லும், தெனதோங்கிட, துனங்கிட, தம்பிரானே, இடம், விட்டு