பாடல் 719 - மதுராந்தகம் - திருப்புகழ்

ராகம் - பூர்வி
கல்யாணி
தாளம் - அங்கதாளம் - 15
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 15
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதாந்த தத்த தனன தத்தத் தந்த தத்த தந்த ...... தனதான |
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக் கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி சதிதாண்ட வத்தர் சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச் செயல்மாண்டு சித்த மவிழ நித்தத் த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ் சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற் றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான் அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக் கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற் றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற் குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா மதுராந்த கத்து வடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே. |
மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார் பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும், ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக, என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன? வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து, தேவர்கள் வாழ்வுற, சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான* போர் விளையாட்டை உடையவனே, மதுராந்தகத்துக்கு ++ வடக்குப் பகுதியில் திருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே.
* முருகன் உக்கிர பாண்டியனாக அவதரித்து பாண்டிய நாட்டுப் பஞ்சத்தை தீர்க்க பொன்மயமான மேருமலையை கையிலுள்ள செண்டாயுதத்தால் அடித்து பொன் கொட்டச் செய்த வரலாறு - திருவிளையாடற் புராணம்.
** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 719 - மதுராந்தகம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, பொன்மயமான, மேருமலையை, முருகன், பெருமாளே, திருச்சிற்றம்பலம், வைத்த, தத்த, தந்த, கங்கை, தாளம்