பாடல் 713 - திருப்பேர்ருர் - திருப்புகழ்

ராகம் -
பந்து வராளி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தனன தானன தானன தனன தானன தானன ...... தனதான |
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ திமிர மேயரி சூரிய ...... திரிலோக தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி குணக லாநிதி நாரணி ...... தருகோவே குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம் பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக பசுர பாடன பாளித ...... பகளேச பசித பாரண வாரண துவச ஏடக மாவயில் பரவு பாணித பாவல ...... பரயோக சமப ராமத சாதல சமய மாறிரு தேவத சமய நாயக மாமயில் ...... முதுவீர சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு சமர மாபுரி மேவிய ...... பெருமாளே. |
* அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.
** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 713 - திருப்பேர்ருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கொண்ட, தலைவனே, அணிந்தவனே, சமயம், பச்சை, சூரியனே, பெருமாளே, தகதிமி, திமிர