பாடல் 680 - திருவேற்காடு - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானந்தா தனதான தானந்தா தனதான தானந்தா தனதான ...... தனதான |
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல மாளம்போர் செயுமாய ...... விழியாலே ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார ஆடம்பார் குவிநேய ...... முலையாலே சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிநீப ...... இடையாலே சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு காலந்தா னொழிவேது ...... உரையாயோ பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத மாதம்பா தருசேய ...... வயலூரா பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர பாசந்தா திருமாலின் ...... மருகோனே வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு ...... முறவீறு வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு வேலங்கா டுறைசீல ...... பெருமாளே. |
* அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி. இவன் தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார். அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.
** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 680 - திருவேற்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானந்தா, அங்கு, அம்பு, போலவும், முடிவில், இருப்பவனே, வாய்ந்த, என்னை, போல், எழுந்து, திருமாலின், மிகவும், பெருமாளே