பாடல் 679 - பாக்கம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த ...... தனதான |
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும் பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும் வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும் பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே. |
* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 679 - பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னும், கொண்டு, தந்த, தாத்தத், தனந்த, ருந்து, கெண்டை, பொன், நின்ற, பெருமாளே, புகழ்ந்து, சுமந்து, ரிந்து, நின்று, கடந்து