பாடல் 678 - பாக்கம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தாத்தத்த தானதன ...... தனதான |
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல் காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர் போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர் பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே. |
* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 678 - பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, வல்ல, தாத்தத்த, உடல், தானதன, குத்தி, பெருமாளே