பாடல் 663 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தய்யதன தான தய்யதன தான தய்யதன தான ...... தனதான |
பையரவு போலு நொய்யஇடை மாதர் பையவரு கோலந் ...... தனைநாடிப் பையலென வோடி மையல்மிகு மோக பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன் உய்யவொரு கால மையவுப தேச முள்ளுருக நாடும் ...... படிபேசி உள்ளதுமி லாது மல்லதவி ரோத உல்லசவி நோதந் ...... தருவாயே வையமுழு தாளு மையகும ரேச வள்ளிபடர் கானம் ...... புடைசூழும் வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள மையுததி யேழுங் ...... கனல்மூள வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே. |
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தின் மேற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 663 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்யதன, ஆகிய, வள்ளி, மைலில், என்றும், உள்ளது, பெருமாளே, கொண்ட, ஐயனே