பாடல் 658 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய ...... தனதான |
குவலய மல்கு தவலிகள் முல்லை குளிர்நகை சொல்லு ...... முதுபாகு குழையிள வள்ளை யிடைசிறு வல்லி குயமுலை கொள்ளை ...... விழைமேவிக் கவலைசெய் வல்ல தவலரு முள்ள கலவியில் தெள்ளு ...... கவிமாலை கடிமல ரைய அணிவன செய்ய கழலிணை பைய ...... அருள்வாயே தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு தனியுழை புள்ளி ...... யுடனாடித் தருபுன வள்ளி மலைமற வள்ளி தருதினை மெள்ள ...... நுகர்வோனே அவநெறி சொல்லு மவரவை கொல்லு மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல ...... பெருமாளே. |
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 658 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வள்ளி, வல்ல, உள்ள, தனதன, தய்ய, வாய்ந்த, மாலைகளையும், மைலில், இருந்த, கொடி, எல்லாம், பெருமாளே, சொல்லு, முல்லை, செய்ய, புள்ளி, மலர், போன்றது