பாடல் 656 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - சாமா;
தாளம் - அங்கதாளம் - 15
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதானா |
அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி இடர்படு மடிமை யுளமுரை யுடலொ டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே வடமணி முலையு மழகிய முகமும் வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் மரகத வடிவு மடலிடை யெழுதி வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா விடதர திகுணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே. |
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 656 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, வெள்ளி, தகதிமி, உலகத்தில், மனம், தரித்தவர், மைலில், தாமரை, செய்யும், பெருமாளே, முகமும், தனதன, மரகத, நின்ற, ஆகிய, ஐந்து