பாடல் 654 - மாயாபுரி - திருப்புகழ்

ராகம் -
பந்துவராளி; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனன தனந்த தானன ...... தனதான தனன தனந்த தானன ...... தனதான |
சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம் சிதறி யலைந்து போவது ...... செயலாசை மகர நெருங்க வீழ்வது ...... மகமாய மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே அகர நெருங்கி னாமய ...... முறவாகி அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே. |
சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும். அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக. (வீரமஹேந்திரபுரத்தின்)* வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே. மாயாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* சூரனது அரசாட்சியில் அவனது தலைநகராம் வீரமஹேந்திரபுரத்தின் வழியாகச் செல்லும் சூரியன் தனது உக்ரத்தைக் குறைத்துக்கொள்ள சூரன் ஆணையிட்டதால் சூரியன் பட்ட துன்பம் முருகனால் தீர்த்துவைக்கப்பட்டது.
** மாயாபுரி முக்தித் தலங்களில் ஒன்றான ஹரித்துவாரம் - உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 654 - மாயாபுரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எழுத்தை, வீரமஹேந்திரபுரத்தின், துன்பம், சூரியன், பெருமாளே, கருணை, தனந்த, தானன, தனதான, நெருங்க, தகதிமி