பாடல் 649 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன ...... தனதான |
தொடுத்த வாளென விழித்து மார்முலை யசைத்து மேகலை மறைத்து மூடிகள் துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர் சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ முடித்த வார்குழல் விரித்து மேவிதழ் துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப் படுத்த பாயலி லணைத்து மாமுலை பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை வெளுத்து வாய்களு மலத்தி னாயென பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே விதித்து ஞாலம தளித்த வேதனை யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல் விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி நடுக்க மாமலை பிளக்க வேகவ டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா அறத்தில் வாழுமை சிறக்க வேயறு முகத்தி னோடணி குறத்தி யானையொ டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே. |
* அருக்கொணாமலை இலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 649 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்த, விழித்து, கொண்டு, நீண்ட, பெருமாளே, உற்று, கொண்ட, வெளுத்து, அழகிய, வாயிதழ், துடித்து, மறைத்து, நகைத்து, விரித்து, படுத்த, கடித்து