பாடல் 644 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தத்தத்த தானதன தத்தத்த தானதன தத்தத்த ...... தனதான |
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப யோதர நெருக்குற்ற ...... இடையாலே பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர் காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த காதில்முக வட்டத்தி ...... லதிமோக காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான் தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன் சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி கோணசயி லத்துக்ர ...... கதிர்காம வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின் வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை வேல்களில கப்பட்ட ...... பெருமாளே. |
* ராவணனுக்குப் பயந்து, அவனது ஆணைப்படி சூரியன் இலங்கை நகர் வழியாகத் தன் தேரைச் செலுத்தாமல் இருந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 644 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தானதன, உள்ள, தத்தத்த, சிக்கிக், சூரியன், மேகம், கப்பட்ட, போல், பெருமாளே