பாடல் 642 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - காபி;
தாளம் - ஆதி - கண்டநடை - 20
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ...... தனதான |
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார் பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார் பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே கதிர்க்காம முற்றார் ...... முருகோனே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 642 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தா, பின்பு, தரித்தார், பெற்றாய், குவித்தாய்