பாடல் 641 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தானத்த தனதனன தானத்த தனதனன தானத்த ...... தனதான தானனா |
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே. |
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 641 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாய்ந்த, மார்க்கம், தனதனன, ஞானம், தானத்த, இடுதல், தொழில், மடல், உமது, யோகம், சரியை, வாழ்வித்த, கிரியை