பாடல் 632 - கழுகுமலை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன ...... தனதான |
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே மதலை மறுகிவா லிபத்தி லேவெகு பதகர் கொடியவா ளிடத்தி லேமிக வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே. |
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 632 - கழுகுமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தானன, தனத்த, பெரிய, கழுகு, பெருமாளே