பாடல் 628 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் -...;
தாளம் -
தனன தனன தனத்தந் ...... தனதான |
தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே கருதி மிகவு மயக்கம் ...... படவோநான் பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின் பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந் திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே. |
வெண்ணிறமுள்ள சந்திரன் வீசும் நெருப்பாலும், காமலீலைக்கு இடம் தரும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலும், சோகத்தை மிகவும் தெரியப்படுத்தும் குயிலாலும், எனது மனதில் மிகவும் நினைத்து நான் மயக்கத்தை அடையலாமோ? பவளத்தை ஒத்த வாயிதழை உடைய பச்சை நிறமுள்ள குறத்தியான வள்ளியின் பருத்த மலை போன்ற மார்பகங்களின் மீது புரளும் ஒளி வீசும் மணி மாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே, விளங்குகின்ற மயூரகிரி என்கின்ற குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. நிலவு, மன்மதன், பாணங்கள், குயில், முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 628 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மிகவும், மன்மதன், வீசும், பெருமாளே, மிகவு