பாடல் 626 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன தானா தானா தந்தன தத்தன ...... தனதான |
நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே நீயே நானே யென்றொரு சத்தியம் வாய்கூ சாதோ துங்க படத்திகள் நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும் ஆசா பாசா தொந்தரை யிட்டவர் மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம் ஆகா தாவே சந்தரு திப்பொழு தோகோ வாவா வென்று பகட்டிக ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர் வாயா வாவா வென்று குடித்தருள் பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே மாசூ டாடா டும்பகை யைப்பகை சூரா ளோடே வன்செரு வைச்செறு மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு தேனா றேசூழ் துங்க மலைப்பதி மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே. |
அன்பு, ஆசாரம், ஆடம்பரம் இவை பொருந்திய பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற கள்ள வீணிகள், கீழ்க் குலத்து இழிந்தோர்களோடும் பழக, பறிக்கின்ற பொருளாலே, உன் மேல் ஆணை, என் மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல் பேசுகின்ற வஞ்சக எண்ணத்தினர், எதிரிலேயே நின்று தளுக்கு, ஆடம்பரம் செய்பவர்கள், யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக் காட்டித் தொந்தரவு செய்து, அவர்கள் மேல் விழுபவர்களிடம் சண்டித்தனம் செய்பவர்கள், நல்ல பேரழகுடனே மேலே தோல் எங்கும் மினுக்குபவர்கள், அதிக மோகம் வைக்கலாகாது, காம மயக்கம் இப்போது உண்டாகிறது, ஓகோ வாரும் வாரும் என்று (ஒரு பக்கம்) கூறி (மறு பக்கம்) வஞ்சிப்பவர்கள், பொருந்தாத மோகம் தரும் வீணர்கள் ஆகிய வேசைகளின் அருகிலும் உறவு சம்பந்தம் ஆகுமோ? எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி, அருள் பேர் அளவுக்கு மாத்திரம் (உண்மையில் அருள் இல்லாது) வைத்து, பெரும் கம்சன் அனுப்பி எதிரில் விடுத்த தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட (பூதனை என்னும்) பேய், பரந்த வியக்கத் தக்க பிளந்த வாயைக் கொண்ட பெரிய பெண்ணும் எளிதாகவே பேய் ரூபம் எடுத்தவளாகிய அந்த அரக்கியின் போரை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணனின் மருகனே, குற்றத்தில் ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும், பகைத்து நின்ற சூரர்களையும் வலிய போரில் அழித்த மகா சூரனே, பூமி முழுவதும் அருள் பாலித்து விளங்கும் முருகனே, வானாடு முதலான ஏழு பூமியும் புகழ்பெற்று விளங்கும் தேனாறு என்னும் நதி சூழ்ந்த பரிசுத்த மயூரமலைப் பதியில் உறைபவனே, தழைக்கும் குன்றக்குடியில்* வீற்றருளும் பெருமாளே.
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இதற்கு மயூரமலை என்ற பெயரும் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 626 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மேல், வென்று, தத்தன, தந்தன, அருள், வாரும், பக்கம், வாயைக், பேய், விளங்கும், என்னும், கொண்ட, மோகம், பெரிய, ஆடம்பரம், பொருளாலே, ளோடே, பேசா, மட்டைகள், துங்க, வாவா, நின்று, பெருமாளே, மாசூ, செய்பவர்கள்