பாடல் 621 - கொடுங்குன்றம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான |
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக் குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே. |
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 621 - கொடுங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தெந்தெந், கொடுங்குன்றம், பிரான், தெனந், தம்பிரானே, கண்களாலே, தந்தம்