பாடல் 619 - புகழிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனனதன தான தனனதன தான தனனதன தான ...... தனதான |
மருவுமலர் வாச முறுகுழலி னாலும் வரிவிழியி னாலு ...... மதியாலும் மலையினிக ரான இளமுலைக ளாலு மயல்கள்தரு மாதர் ...... வகையாலும் கருதுபொரு ளாலு மனைவிமக வான கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ கமலபத வாழ்வு தரமயிலின் மீது கருணையுட னேமுன் ...... வரவேணும் அருமறைக ளோது பிரமன்முதல் மாலும் அமரர்முநி ராசர் ...... தொழுவோனே அகிலதல மோது நதிமருவு சோலை அழகுபெறு போக ...... வளநாடா பொருதவரு சூரர் கிரியுருவ வாரி புனல்சுவற வேலை ...... யெறிவோனே புகலரிய தான தமிழ்முநிவ ரோது புகழிமலை மேவு ...... பெருமாளே. |
* புகழிமலை திருச்சி மாவட்டத்தில் புகலூர் ரயில் நிலையத்துக்கு 2 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 619 - புகழிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, பெருமாளே, புகழிமலை, மூழ்கி, ளாலு, மீது