பாடல் 614 - தென்சேரிகிரி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தான தனதனன தந்தான தனதனன தந்தான தனதனன ...... தனதான |
எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி ...... யிணையாடித் தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள் சந்தேக மறவெபறி ...... கொளுமானார் சங்கீத கலவிநல மென்றோது முததிவிட தண்பாரு முனதருளை ...... யருள்வாயே சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித் தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள் தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ் சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச் செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே. |
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 614 - தென்சேரிகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தான, தனதனன, சென்று, கொண்ட, பொருந்திய, மேல், கூறி, பெருமாளே, கொண்டு, மனம்