பாடல் 597 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான |
ஆல காலப டப்பைம டப்பியர் ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள் ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள் காம போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ மேலை வானொரு ரைத்தச ரற்கொரு பால னாகியு தித்தொர்மு நிக்கொரு வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே ஞான தேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே. |
* நெருவைப்பதி என்பது நெருவூர். கருவூருக்கு அருகே உள்ளது.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 597 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, சென்று, உள்ளது, இருப்பதால், என்றும், அந்த, திருச்செங்கோடு, செய்து, மாலை, பெருமாளே, உடைய, பாம்பின், புரிந்து