பாடல் 596 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன தனத்தந் தான தானன ...... தனதான |
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு மயக்கம் பூண மோதிய ...... துரமீதே மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள் பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத் திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ் செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 596 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந், தானன, திருச்செங்கோடு, என்றும், நான், இருப்பதால், இரத்தம், மயக்கம், கூடிய, பெருமாளே