பாடல் 590 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தந் தானன தனத்தந் தானன தனத்தந் தானன ...... தனதான |
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையி ...... லழியாதே விலக்கும் போதக மெனக்கென் றேபெற விருப்பஞ் சாலவு ...... முடையேனான் வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை விடற்கஞ் சேலென ...... அருள்வாயே அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை அறுக்குங் கூரிய ...... வடிவேலா அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை யடுக்கும் போதக ...... முடையோராம் சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக திருச்செங் கோபுர ...... வயலூரா திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய திருச்செங் கோடுறை ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 590 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந், தானன, அளிக்கும், அழகிய, இருப்பதால், என்றும், நான், திருச்செங்கோடு, பெருமாளே, சீரிய, கடைக்கண், போதக, திருச்செங், சிறப்பான