பாடல் 59 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - சுருட்டி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தானத் தானன தானத் தானன தானத் தானன ...... தந்ததான |
சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும ...... நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக ...... அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி ...... கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும ...... தென்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு ...... யங்ககால நீலக் ¡£பக லாபத் தேர்விடு நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு ...... மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிக வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே. |
காவலாய் இருப்பவையும் அழகானவையுமான உன் தாமரை போன்ற திருவடிகளை அடைவதற்கு வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மீதும், பகையற்ற சாந்த நிலைமீதும், நற்குண நன்னெறியின் மீதும் அன்பை வைக்காமல், காமத்தாலும், கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின் சேஷ்டைகளாலும் அழிகின்ற மாயையான இந்த உடல் மீதும், இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப் பற்றுக்களின் மீதும் சிலர்ஆசைகொண்டு இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை. கடலும், சூரனும், மேரு மலையும் தூளாகும்படி நெடிய விஷமுடைய பாம்பைக் காலிலே கொண்டு நீலக் கழுத்தையும் தோகையையும் கொண்ட தேர் போன்ற மயிலைச் செலுத்தும் கடப்ப மாலை அணிந்த வீரனே, திருச்செந்தூரில் வாழ்பவனே, வேள்வித்தீயை தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே தருகின்ற உமாதேவியின் குமாரனே, யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே, உன் முன்னே வாயில்லா ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 59 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தானத், தானன, தாமரை, நீலக்