பாடல் 60 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ......
தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் தனதனன தாந்த தந்தத் ...... தனதான |
தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும் புகலரிய தாந்த்ரி சங்கத் தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப் புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர் புநிதமிலி மாந்தர் தங்கட் புகழ்பகர்தல் நீங்கி நின்பொற் புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான தனனதன தாந்த னந்தத் தெனநடன மார்ந்த துங்கத் தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா திசையசுரர் மாண்ட ழுந்தத் திறலயிலை வாங்கு செங்கைச் சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா திகழ்வயிர மேந்து கொங்கைக் குறவனிதை காந்த சந்த்ரச் சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே. |
மயிர்ச் சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள், மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும் தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை, உள்ளத்தில் காம ஆசை மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும், சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும், பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ? தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே, திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி, செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே, பல உச்சிகளைக் கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின் ஒப்பற்ற குழந்தையே, விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சந்திரன் தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 60 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாந்த, தந்தத், கொண்ட, அழகிய, தனதனன, தனதான, னந்தத், பெருமாளே, அணிந்த, விளங்குகின்ற, தனனதன, இன்பம், தகுகணக, தகுடதகு, நீங்கி, திகுடதிகு, தீந்த, தாங்க, மிந்தித், ணங்கத்