பாடல் 587 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த ...... தனதான |
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி வந்தூரு கொண்ட ...... லதனோடும் வண்காம னம்பு தன்கால்ம டங்க வன்போர்ம லைந்த ...... விழிவேலும் கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து குன்றாம லுன்ற ...... னருள்தாராய் பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போனு கந்த ...... மருகோனே பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற ...... குமரேசா செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில் நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற செங்கோட மர்ந்த ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 587 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தான, தந்த, இருப்பதால், என்றும், திருச்செங்கோடு, பெருமாளே, சங்கு, உனது