பாடல் 579 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் -
கரஹரப்ரியா ; தாளம் - சதுஸ்ர்ருபகம் - 6
- எடுப்பு - வீச்சில் 1/2 இடம்
- எடுப்பு - வீச்சில் 1/2 இடம்
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த தனாதனன தான தந்த ...... தனதான |
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன் சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல் கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன் தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல் சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப நபோமணி சமான துங்க ...... வடிவேலா படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான் விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு விராலிமலை மீது கந்த ...... பெருமாளே. |
தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து அவனைக் குபேரன் என்று கூறி, அவனுடன் கூடிக் குலாவி வீணாகத் திரிந்து, இந்தப் பூமியில் தாங்கமுடியாத குடும்பச் சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமை நிறைந்த கலிபுருஷனால் வாடி, எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு அந்நாளில் உனது திருவருளை விரும்பாது காலம் கழித்தேன். தீயில் சுடாத பசும்பொன் போன்ற மார்புடைய பெண்களிடம் என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி, சுகத்தைத் தரக்கூடிய வழியில் ஒழுக்கத்துடன் நான் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து போக, துன்பமே மிகவும் பெருகி, வலிமை இல்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன் யமனே, நீ இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது உனது நாவிலிருந்து வருமோ? அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக. ஏழு உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே, நட்டுவைக்கப் படாத சுழிமுனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின் நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே*, சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே, வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் தழைந்து நாள்தோறும் விடாமல் மழை பொழிவதால் பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள விராலிமலை** மீது விரும்பி வாழும் பெருமாளே.
* ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 579 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், தனாதனன, விந்து, தந்த, சுழிமுனை, படாத, மூலாதாரம், உரிய, உயிர், பெயர்களும், இருக்கும், வழியில், மீது, விராலிமலை, நொந்து, பெருமாளே, நிறைந்த, இடம், உனது, இல்லாத