பாடல் 57 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான தத்ததன தானதன தத்தான ...... தனதான |
சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ¡£டநிகர் செப்பான ...... தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள்பனு வற்கார திக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாது சித்தஅநு ராககல விக்கார துட்டஅசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள் முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவநி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதான முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 57 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவனே, தத்ததன, தானதன, கொண்டவனே, தத்தான, கொண்ட, பூவை, பக்தி, வேலை, மிகுந்த, பெருமாளே, அடியார்கள், விக்கார, இனிதான, முத்தமிழை, சைக்கார, தேன்