பாடல் 567 - இரத்னகிரி - திருப்புகழ்

ராகம் - ஆனந்த
பைரவி; தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்
தத்தனா தானனத் ...... தனதான தத்தனா தானனத் ...... தனதான |
பத்தியால் யானுனைப் ...... பலகாலும் பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே உத்தமா தானசற் ...... குணர்நேயா ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா வித்தகா ஞானசத் ...... திநிபாதா வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே. |
அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே* பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 567 - இரத்னகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - திருவருள், பெருமாளே, தனதான, தானனத், தத்தனா