பாடல் 559 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன ...... தந்ததான |
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்¡£டா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லாமூ தேவிகள் புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் கருதொ ணாப்பல கோடா கோடிகள் விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ குருக டாக்ஷக லாவே தாகம பரம வாக்கிய ஞானா சாரிய குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான கொடிய வேட்டுவர் கோகோ கோவென மடிய நீட்டிய கூர்வே லாயுத குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் செருப ராக்ரம கேகே வாகன சரவ ணோற்பவ மாலா லாளித திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே சிகர தீர்க்கம காசீ கோபுர முகச டாக்கர சேணா டாக்ருத திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே. |
* குருகு த்ரபுரம் = கோழியூர் (உறையூர்). குருகு = கோழி.இங்கு யானையைக் கோழி வென்றமையால் இப்பெயர் வந்தது.திருச்சிக்கு அருகில் உள்ளது.
** கேகயம் = மயில்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 559 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேல், தாத்தன, குருகு, தானன, தானா, பொல்லாத, உடையவர்கள், பெரிய, கோழியூர், கோழி, வீற்றிருக்கும், என்னும், ஆனவர்கள், வல்ல, தம்பிரானே, கலவி, மாயா, பொருளின், சாத்திர, வாசுகி, தேவர்கள், கோபுர, கொண்ட