பாடல் 560 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான |
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து ...... பனிநீர்தோய் புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி ...... லுடைசோர இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க ...... அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து னிணையடி யென்று ...... புகழ்வேனோ மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில்வி ளைந்த ...... தினைகாவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த ...... முருகோனே தெருளுறு மன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் ...... முதனாளில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 560 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதன, புரள, மனம், கொண்ட, எங்கள், புகழ்வேனோ, சென்று, பெருமாளே