பாடல் 557 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனதனதனத் ...... தனதான தனதனதனத் ...... தனதான |
பகலிரவினிற் ...... றடுமாறா பதிகுருவெனத் ...... தெளிபோத ரகசியமுரைத் ...... தநுபூதி ரதநிலைதனைத் ...... தருவாயே இகபரமதற் ...... கிறையோனே இயலிசையின்முத் ...... தமிழோனே சகசிரகிப் ...... பதிவேளே சரவணபவப் ...... பெருமாளே. |
நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே.
* சிரகிரியை சென்னிமலை என்றும் கூறுவர்.சென்னிமலை ஈரோட்டிற்கு அப்பால் ஈங்கூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 557 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சென்னிமலை, சரவணபவப், தனதான, தனதனதனத்