பாடல் 548 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி ; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன தந்தாதன தானன தாத்தன ...... தனதான |
அந்தோமன மேநம தாக்கையை நம்பாதெயி தாகித சூத்திர மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல் வந்தோமிது வேகதி யாட்சியு மிந்தாமயில் வாகனர் சீட்டிது வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும் வந்தேவெகு வாநமை யாட்கொளு வந்தார்மத மேதினி மேற்கொள மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே திந்தோதிமி தீதத மாத்துடி தந்தாதன னாதன தாத்தன செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச் செங்காடென வேவரு மூர்க்கரை சங்காரசி காமணி வேற்கொடு செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே இந்தோடிதழ் நாகம காக்கடல் கங்காளமி னார்சடை சூட்டிய என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா எண்கூடரு ளால்நெளவி நோக்கியை நன்பூமண மேவிசி ராப்பளி யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 548 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தாதன, தாத்தன, தானன, நாம், விரைவில், இதுதான், பெரிய, பொருந்திய, நமக்கு, பெற்றுக்கொள், னாதன, மேதினி, தாக்கையை, மறவாதே, திந்தோதிமி, பெருமாளே, தீதத, நிறைந்த