பாடல் 545 - பேறைநகர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேநி றைந்த ...... குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த ...... மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் ...... மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே. |
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார்.
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 545 - பேறைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, என்னும், தந்த, பூமியை, ஒப்பான, திருமால், கொண்டு, நிறைந்த, மிக்க, சேர்ந்து, திரிவேனோ, கெண்டை, மீது, பேறைநகர், பெருமாளே, விளையாடும்