பாடல் 544 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ்

ராகம் -
பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான |
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே. |
வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து, ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே, ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி நாணம் அடையும்படி தமது கி¡£டத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,* பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே.
* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர்.காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 544 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, வித்த, காளி, உடைய, தாண்டவம், ஊர்த்துவ, பெருமாளே, வீசி, தனதான, மீது, வேளை