பாடல் 530 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - தர்பாரி
கானடா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான |
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் ...... தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் ...... சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் ...... குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. |
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 530 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்யதன, மெல்ல, வள்ளி, பெருமாளே, நாளில், யாலு, வள்ளிமலை