பாடல் 525 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் -
பிருந்தாவன ஸாரங்கா; தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே. |
* 'சரம்' - தர்ப்பை, 'வனம்' - காடு, 'பவன்' - வெளிப்பட்டவன். நாணற்புல் காட்டில் தோன்றியதால் 'சரவனபவன்'. தமிழ் இலக்கண விதிப்படி 'ர'கரத்தின் பின்வரும் 'ன'கரம் 'ண'கரமாகும் என்பதால் 'சரவணபவன்'.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 525 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கடவுளே, ஆறுமுகக், சரவண, பவநிதி, நிதியே, குமரகுருபரனே, குருபர, யறுமுக, ஆகிய, மலம், வருகின்ற, பெரும், உயிர், சரவணபவனே, பெருமாளே, உடையவனே