பாடல் 524 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் - முகாரி
; தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2
தனத்ததன தனதன தனந்த தனத்ததன தனதன தனந்த தனத்ததன தனதன தனந்த ...... தனதான |
கறுத்ததலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க் கழுத்தடியு மடைய வளைந்து கனத்தநெடு முதுகு குனிந்து கதுப்புறுப லடைய விழுந்து ...... தடுநீர்சோர் உறக்கம்வரு மளவி லெலும்பு குலுக்கிவிடு மிருமல் தொடங்கி உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய் உரத்தநடை தளரு முடம்பு பழுத்திடுமுன் மிகவும் விரும்பி உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ சிறுத்தசெலு வதனு ளிருந்து பெருத்ததிரை யுததி கரந்து செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கியிளை யவனோ டறிந்து செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி மறப்புரிசை வளையு மிலங்கை யரக்கனொரு பதுமுடி சிந்த வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே மலர்க்கமல வடிவுள செங்கை அயிற்குமர குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே. |
* ஒருமுறை உமாதேவியிடம் கோபித்துக்கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்ட முருகக் குழந்தை குகை வழியே திருவேங்கட மலையின் உச்சியை அடைந்து நின்றான் - கந்தபுராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 524 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விழுந்து, இருந்த, தனந்த, தனத்ததன, தனதன, மிகுந்த, இலங்கையில், செலுத்தி, கடலில், வளைந்து, தொண்டு, மருகோனே, பெருமாளே